Humble Offerings,

SAI I have nothing that belongs to me. What I have is your blessing alone. The things I hold as mine are words, actions and deeds.
SAI please accept my humble offerings..... Offerings at your feet BABA

SAI

SAI

NOTES


CREDIT: Many of the uploads here are from SP Archives..Sincere thanks to UPLOADERS AT SP ARCHIVES...

Disclaimer

These short audio clips are provided here only in the hope of enticing more audience for Carnatic music. Not to have any commercial advantage. venkatakailasam The intent is to spread the musical message of great Composers and Artists so as to reach as many listeners as possible. They are provided here for educational purposes and for the listening pleasure. Please respect the rights of the artists and do not copy or reproduce these in any manner for commercial purposes. Care is taken not to include commercial clips as the rights of owners are respected. However, any slip in this regard may be intimated to me by E Mail to enable removal of same. E mail: venkatakailasam@gmail.com venkatakailasam

Friday, July 29, 2011

BARATHI YAAR??

BARATHI YAAR??

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்ப மிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"
HE IS BHARATHI!!!

On Parasakthi

தகத் தகத் தகத் தகதகவென் றாடோமோ? -- சிவ
சக்தி சக்தி சக்தி யென்று பாடோமோ?
(தக)

சரணங்கள்

அகத்தகத் தகத்தினிலே உள் நின்றாள் -- அவள்
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரணமென்று வாழ்ந்திடுவோம் நாமென்றே....

He is Bharathi!!!

On Sakthi..

துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கும் எரியே சக்தி
முன்பு நிற் கின்ற தொழிலே சக்தி
முத்தி நிலையின் முடிவே சக்தி.....

HE is Bharathi!!!

நிதிமி குத்தவர் பொற்றகுவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!
ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்!
வாணி சைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!

He is Bharathi!!!

தெள்ளுற்றத் தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்பு கண்டார்"

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"

He is Bharathi

This thread contains as to what was stated by others about Bharathiarand how they have viewed him: ( All collections are from various Sites on Bharathi for whom my
Sincere and grateful thanks are due)

Life of C. Subramania Bharati By DR. (MS.) MIRA T. SUNDARA RAJAN, D.Phil. (Oxon.) LL.M. (UBC), J.D. (Osgoode), B.A. Hons. (McGill & Paris)
( Great grand daughter of C Subramania Barathi)
Thangammal Barathi’s Grand daughter
C. Subramania Bharati was born in Ettayapuram, South India, in 1882, and died in Madras, in 1921. Deceased at the early age of thirty-nine, Bharati left behind a remarkable legacy of poetry and prose writings whose importance for the Tamils today can only be compared to the status of Shakespeare in the English-speaking world. Bharati’s writings sparked a Renaissance in Tamil literature. While Bharati drew his inspiration from ancient sources of Indian culture, his works were truly innovative in both form and expression. His granddaughter, Dr. S. Vijaya Bharati, an eminent Tamil scholar, writes:
Though Bharati belongs to the age-long tradition of Tamil literature, and limits himself in some places to [its] conventional banks, his poetry flows with [the] racing vigour of contemporaneity, gushing with new ideas and emotions. The course of its flow, its speed and manner, its transgressions and its light are totally new, and original in the finest sense of the word. Its impact on modern Tamil literature has been tremendous … [I]t has given life and form to present-day writing in Tamil.
Bharati was not only the greatest of modern Tamil poets; he was also an ardent Indian nationalist and an impassioned advocate of social reform. Through the power of his ideals, he was able to envision freedom and independence for the three hundred million Indians dominated by British Imperial force. In Bharati’s imagination, the imminent liberation of Indians would free them both from imperial rule by the British – at a time when Britain was the most powerful nation on earth – and from oppressive social customs which had been practised in India for thousands of years.
Unfortunately, Bharati was persecuted for his convictions by both the British and the orthodox elements of his own, Brahmin society, who treated him as an outcast. He was exiled from British India in 1908 and went to live in Pondicherry, a French colony in South India. He spent ten years in exile there and eventually returned to Madras, where he died.
Indian postage stamp in Bharati's honour.
After Indian independence, Bharati’s contribution to Indian culture was widely recognized. There is no major city in India that does not have a street named after him, or a statue erected in his honour. Bharati’s works have been translated into every major Indian language, as well as a number of European languages, including English, French, German, Russian, and Czech. The government of India has issued a postage stamp in his honour.
In recognition of Bharati’s exceptional contribution to Indian culture, as a poet, nationalist, and social reformer, the government of India ultimately conferred upon him the title of Indian “National Poet.”
-Mira sounderrajan





His wife Chellama Barathi on Barathi:

என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Courtesy: Shri S Ramkrishnan permitting to post the above AIR speech of "Chellamma Barathi on Barathi

Felt extremely sad after reading this
Extracts from 'BHARATHIYAI PATRI NANBARKAL' R.A. Padmanabhan, 1982:-


RA Padmanabhan


(பாரதியாரின் அபிமானத்துக்கு உகந்தவரும், அவரால் அன்போடு 'தம்பீ' என்று அழைக்கப்பட்டவரும், புதுவையில் நீலகண்ட பிரம்மச்சாரி அழைக்க 'சூர்யோதயம்' வாரப் பதிப்பில் அவரிடம் உதவியாசிரியராக இருந்தவரும், 1917 -ல் 'நாட்டுப் பாட்டு', 'பாப்பாப் பாட்டு', முரசு', 'கண்ணன் பாட்டு' முதலிய நூல்களை வெளியிட்டவருமான பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, பாரதியாரின் வீட்டில் கடைசி நாள் நிலவரத்தை இக் கட்டுரையில் குறிக்கிறார். இது 'தினமணி' சுடரில் வெளிவந்த கட்டுரை. -- ரா.அ.ப.)

பழந்தமிழ் நாட்டுக்குப் புத்துயிர் அளித்த பெருங் கவியான பாரதியாருக்கு வறுமையின் கொடுமையாலும், ஒரு சாமியாரின் கூட்டுறவாலும் அவர் புதுவையில் இருந்த பொழுது கஞ்சாப் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதுபற்றிப் பாரதியாரைக் குறைகூறுவதைவிட தமிழ் நாட்டின் தவக் குறைவைச் சிந்திப்பது நலம். பாரதியார் புதுவையிலிருந்து வெளியே வந்த பின்னர், திருநெல்வேலி ஜில்லாவில் அவருடன் சில ஊர்களுக்கு நான் சென்ற பொழுது நண்பர்களிடம் பணம் பெற்றுக் கஞ்சாவை ஏராளமாக வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார். அதனால் அவரிடம் பணம் கொடுக்க வேண்டாமென்று நண்பர்களிடம் அந்தரங்கமாகச் சொல்லவேண்டிய விரும்பத்தகாத கடமையும் எனக்கு ஏற்பட்டது.

பின்னர், பாரதியார் சென்னைக்கு வந்தார். 'சுதேசமித்திர'னில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அப்பொழுதும் அவரது கஞ்சாப் பழக்கம் வளர்ந்தே வந்தது. திருவல்லிக்கேணியில் அவர் குடியிருந்தார். 'காக்கை குருவியெங்கள் ஜாதி' என்று பாடிய பாரதியார் பார்த்தசாரதி கோயில் யானைமீது அன்பு கொண்டார். கவியரசருக்கும் கஜேந்திரனுக்கும் நட்பு வளர்ந்து வந்தது. ஆனால், ஒரு நாள் பாரதியார் கஜேந்திரனுக்குச் சிற்றுண்டி அளிக்கச் சென்றபோது அது அவரை எக் காரணத்தினாலோ தூக்கியெரிந்துவிட்டது. யானைக்குச் சிறிது தூரத்தில் உணர்விழந்து கிடந்த பாரதியாரை அடுத்த வீதியில் இருந்த குவளை கிருஷ்ணமாச்சாரியார் விரைந்தோடி வந்து தூக்கியெடுத்து அவரது வீட்டுக்குக் கொண்டு சென்றார். 'வீரர் பிரான் குவளையூர்க் கண்ணன்' என்று பாரதியார் பாடிய அந்தக் குவளை கிருஷ்ணன் சமயத்தில் வந்திராவிட்டால் வாழ்நாள் அன்றே முடிவெய்தியிருக்கும்.

கஞ்சாவை அளவுக்கு மிஞ்சித் தின்று வந்ததனால் அளவுக்கு மிஞ்சிச் சூடேறியிருந்த பாரதியாரின் மென்மையான உடல் யானை தூக்கி எறிந்ததன் பயனாகக் கலகலத்துப் போய் விட்டது. அதனையொட்டி அவருக்குச் சீதபேதி ஏற்பட்டது. பாரதி பாயும் படுக்கையுமாய் இருந்த செய்தி சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த எனக்குக் கடைசி நாளில்தான் தெரியவந்தது. லக்ஷ்மண ஐயர் என்ற ஒரு நண்பருடன் மாலையில் நான் பாரதியாரைப் பார்க்கச் சென்றேன். அவரது நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவர் மயக்க நிலையில் கிடந்தார். திருவல்லிக்கேணி மாட வீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்ற வைத்தியரை அழைத்துக்கொண்டு வந்து காட்டினோம். (இவர் ஆந்திர கேசரியும் ஆந்திர நாட்டு முதன் மந்திரியுமான ஸ்ரீ தங்கதூரி பிரகாசத்தின் தம்பியென்று எனது நினைவு.) அவர் பாரதியார் உடம்பைப் பரிசோதித்து எதோ மருந்து கொடுக்க விரும்பினார். ஆனால், பாரதியார் மருந்தை அருந்துவதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். டாக்டர் அவதிடம் பேசி மருந்தை அருந்துமாறு வாதாடிய பொழுது பாரதியார் தமக்கு எந்த மருந்தும் வேண்டாம் என்று கண்டிப்பாக மறுத்து விட்டார். வைத்தியர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இரவெல்லாம் பாரதியார் மயக்க நிலையிலேயே கிடந்தார்.

பாரதியாரின் நிலையை அறிந்த நானும் அன்பர் லக்ஷ்மண ஐயரும் இரவில் அங்கேயே தங்குவதென முடிவு செய்தோம். எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்குப் பாரதியாரின் மூச்சு அடங்கிவிட்டது. உலகத்தாருக்கு 'அமரத்வ' உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார்.


Bharathi's addiction to kanja-Was this true?

Some where it was stated that Barathi’s poverty and his association with a saint landed him into the habit of using Opiam.
So far as I could gather his association was only with Kulluchami who was an ardent follower of Vadalur Ramalinga swamigal and his suddha sanmargam.
Please read the article below:
Arutperum Jodhi Arutperum Jodhi Thaniperumkarunai Arutperum Jodhi
National Poet Bharathi -A Sanmarge
Every one is aware of Bharathiyar as a poet, but not aware of that he was a yoga practitioner of a Grace Path called Suddha Sanmargam for-Immortal Life. During the Independence struggle, British police searched him for his revolutionary articles, speeches and patriotic songs. So he fled to Puducherry for asylum –It was the French colony then.

In this period, he happened to meet a sage by name KULLACHAMI – who was following Suddha sanmargam.

It was the turning point of his life and birth for initiating into suddha sanmarga. As he hibernated, Bharathiyar didn’t attend his mother’s funeral for the fear of British Police. He was longing to see his mother’s face, so he went to his Guru and expressed his desire – who superimposed his mother’s face .Bharathiyar was all in tears and was so grateful to his Guru and fell on His feet.
Sanmargam – is a commune which follows the path of Truth and Harmony – Universal brother hood which believes “I and He” the same. After merging with Sanmargam, he wrote many poems in line with this school of philosophy - Grace Path.
He wrote many poems, which were on the name of Kannan and Kannamma. The whole world thought and even now thinks that Kannamma is the nick name by which he addressed his wife and Kannan – The Divine child who played on the banks of river Yamuna. They are the not the human beings indeed – but the personifications of mystical experiences arising out of an organ in the human body so he termed as such. This will be very well understood by those who got initiation in this path. He had a big fire in his body through yoga, his mind and soul longing for the liberation from this earthly life, so he was not able control on it.
On the other hand he spent his time & energy for the liberation of the nation, so he was not able to continue the Immortal Life practice.
Had he not participated in the freedom struggle, India would have witnessed yet another saint like Ramalinga Swamigal.

With thanks and regards BG Venkatesh.

This is what Yadugiri has stated : "Bharathi came under the spell of a sAmiAr--kuLLach chAmiAr. He came to know him because KuLLach chAmi frequented Murugesam Pillai's house. The poet who had a thirst for new ideas, found a guide in him. From then on, whether it did him any good or not, Bharathi started seeking the company of some mendicants"
These mendicants refereed to by her is notonly of Kullachamiar but also possibly about Shri Neelakanta Brhmachari-See detail about him down below...

His association with Kulluchami had not repeat not made Bharathi a drug addict. On the contrary, it was a
“turning point of his life and birth for initiating into suddha sanmarga. As he hibernated, Bharathiyar didn’t attend his mother’s funeral for the fear of British Police. He was longing to see his mother’s face, so he went to his Guru and expressed his desire – who superimposed his mother’s face .Bharathiyar was all in tears and was so grateful to his Guru and fell on His feet”
“Bharathi spent his time & energy for the liberation of the nation, so he was not able to continue the Immortal Life practice “ about which he mentioned to yadugiri .

There have been some forces bent upon discrediting Bharathi, and his compositions .
They were from later generations and not contemporaries of Bharathi.

This what Shri.Nadhivarman The General Secretary of Dravida Peravai, a political party for unifying global Tamils observes:

“If in all languages such derogatory remarks against Bharathiar reaches all the nook and corner of the world, what should we do ?
Is it time to just sing sonnets on Bharathi sitting at our homes, while in world Bharathiar is portrayed as an oppressor of women, drug addict, casteist, selfish convert to nationalist cause etc.

See the link:
http://www.madeinthoughts.com/BharathiLastDay.html
This contains almost similar material about as to what had happened on the last day of Bharathi
except the portion quoted above regarding his addiction. See below:

பாரதியாரின் கடைசி நாள்


1921 செப்டம்பர் 11ம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்...

""அன்றிரவு பாரதி தமது நண்பர்களிடம், "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸ?965;்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னனாக இருந்தவர். 1914 ?2990;ுதல் மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தார் என்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தனர்.

முன்னிரவில் பெரும் பாகம் மயக்கத்தில் இருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்'' என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.

இன்னொரு நண்பரான பரலி சு. நெல்லையப்பர் கூறுகிறார்...

பாரதியார் பாயும் படுக்கையுமா யிருந்த செய்த சிந்தாத்திரிப் பேட்டையிலிருந்த எனக்குக் கடைசி நாளில்தான் தெரிய வந்தது. நான், லக்ஷ்மண ஐயர் என்ற எனது நண்பர் ஒருவருடன் அவரைப் பார்க்கச் சென்றேன். பாரதியார் நிலை கவலைக்கிடமாய் இருந்தது. அவர் மயக்க நிலையில் கிடந்தார். திருவல்லிக்கேணி மாட வீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்கிற வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து காட்டினோம்.

அவர் பாரதியார் உடம்பைப் பரிசோதனை செய்து ஏதோ மருந்து கொடுக்க விரும்பினார். ஆனால், பாரதியார் மருந்தை அருந்தப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். டாக்டர் அவரிடம் பேசி மருந்தை அருந்தும்படி வாதாடியபொழுது பாரதியார், "எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்" என்று கண்டிப்பாகக் கோபமாகச் சொல்லிவிட்டார்.

எனவே, வைத்தியர் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார். பாரதியார இரவெல்லாம் மயக்க நிலையிலேயே இருந்தார்.

பாரதியார் நிலையை அறிந்த நானும் நண்பர் லக்ஷ்மண ஐயரும் அவ்விடத்திலேயே இரவில் தங்கி வந்தோம். எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி, எழுந்து, எமனுடன் போராடிக்கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம்.

பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கியது. உலகத்தாருக்கு "அமரத்துவம்" உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார்.

"கரவினில் வந்து உயிர்க்குலத்தினை அழிக்கும்காலன் நடுநடுங்க விழித்தோம்"

என்றும்,

"காலா என் கண்முன்னே வாடா ?3;ன்னைக்காலால் உதைக்கிறேன்"

என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்.

பாரதியாரின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்தவுடன் நகரத்திலுள்ள நண்பர்களுக்குச் சொல்லி யனுப்பினோம். எங்களுக்கு நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் அப்பொழுது மிகச் சிலரே. அப்பொழுது மண்ணடி ராமசாமி தெருவில் குடியிருந்த வக்கீல் சா. துரைசாமி ஐயர், இந்தி பிரசார் ஹரிஹர சர்மா, மாஜி மேயர் சக்கரை செட்டியார், அப்பொழுது புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த எதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா ?4;ால்வரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பாரதியாரின் குடும்பத்திற்கு எப்பொழுதும் ஆதரவு புரிந்து வந்த வக்கீல் துரைசாமி ஐயரே பாரதியாரின் கடைசி நாள் கிரியைக்கும் உதவி புரிந்தார்.

பாரதியார் உடலை மறுநாட் காலை எட்டு மணிக்குத் திருவல்லிக்கேணி மயானத்திற்கு தூக்கிக்கொண்டு போனோம். நானும் லக்ஷ்மண ஐயரும், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், ஹரஹர சர்மா, ஆர்யா முதலியவர்கள் பாரதியார் பொன்னுடலை இறுதியாகத் தூக்கிச் செல்லும் பாக்கியம் பெற்றோம். பாரதியார் உடலம் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடலம் சுமார் அறுபது பவுண்டு நிறை இருக்கலாம்.

இன்று உலகம் போற்றும் கவிச் சக்கரவர்த்தியுடன் அன்று கடைசி நாளான திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேர் இருக்கலாம்.

பிராமணர்களுக்குகென்று குறிக்கப்பட்டிருந்த பகுதியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

பாரதியார் பொன்னுடலை அக்னி தேவனிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

?;வ்வாறு நெல்லையப்பர் பாரதியின் கடைசி நாளை உருக்கமாக விவரித்துள்ளார்.

பாரதிக்கு பிள்ளை இல்லாததால் யார் அவருக்கு கொள்ளியிடுவது என்று பேச்சு வந்தபோது யாரோ, நீலகண்ட பிரம்மச்சாரி கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள். உடனே அவர், ""என்ன, நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளி கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்த சடங்குகளை செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்'' என்று மறுத்துவிட்டார்.( This is contested by some)

முடிவில், பாரதியின் தூரத்து உறவினரான வி. ஹரிஹர சர்மாதான் கர்மங்களை செய்தார்.

தென் தமிழ்நாட்டில் சித்திரபானு கார்த்திகை 27, மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று, அதிகாலை 1.30 மணிக்கு பூத உடல் நீங்கி புகழ் உடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன.

DR. (MS.) MIRA T. SUNDARA RAJAN, D.Phil. (Oxon.) LL.M. (UBC), J.D. (Osgoode), B.A. Hons. (McGill & Paris)
(Great grand daughter of C Subramania Barathi-Grand daughter of Thangammal Barathi)

has this to say on his drug addiction in reply to my message to her...

info@professormira.com to me

Dear Sir,
Thank you for your message.
There is indeed some false information circulating about Bharatiar - mostly, I think, because people do not know the facts. Please do not distress yourself on account of these false websites. The great man's writings will testify to his clarity of mind!
If you are interested, please keep watching for my mother's Bharati-editions, which will offer inspiring insight into the poet's work and life! Progress is slow, but we will update the website with information on these publications as they become available. If you like, you will be able to order books from us in due course.
All best wishes,

Mira Sundara Rajan


Courtesy:"பாரதி - என் தந்தை" திருமதி சகுந்தலா பாரதி. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்.
( Copied from : Bharathi Ilakkiya Payilagam )



"பார்த்தஸாரதி கோயில் யானை
காலை நேரத்தில் சில சமயம் என் தந்தை பார்த்தஸாரதி கோயிலுக்குப் போவார். அங்கு வாசல் மண்டபத்தில் கட்டியிருக்கும் யானைக்குப் பழம் வாங்கிக் கொடுப்பார். பின் அதனுடன் விளையாட்டாகச் சிறிது வார்த்தையாடிவிட்டு வருவது வழக்கம். சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்த என் தந்தை ஒரு நாள் வழக்கம்போல யானைக்குப் பழம் கொடுக்கப் போனார். யானைக்கு மதம் பிடித்திருந்ததால் நான்கு கால்களும் சங்கிலி போட்டுக் கட்டப் பட்டிருந்தது. ஜனங்கள் கம்பி வேலிக்குப் புறம்பே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் தந்தை உள்ளே சென்றபோது அவரை யாரும் தடுக்கவில்லை போலும்! வழக்கம்போல வாழைப்பழத்தை யானையின் அருகில் சென்று கொடுத்தார். துதிக்கையை நீட்டிப் பழத்தை வாங்கிய யானை, பின் அவரைத் துதிக்கையால் கீழே வீழ்த்தி விட்டது. யானையின் நான்கு கால்களுக்குமிடையில் விழுந்து விட்டார். கீழே பாறாங்கல் பரவிய தரை. என் தந்தை எழுந்திருக்கவில்லை. முகத்தினின்றும் இரத்தம் பெருக்கெடுத்து விட்டது. யானை, தன் நண்பனுக்குத் தீங்கிழத்து விட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல, அசையாமல் நின்று விட்டது. அது தன் காலை ஒருமுறை அசைத்திருக்குமானால் அத்துடன் "பாரதியார்" கதை முடிந்திருக்கும். சுற்றி நிற்கும் ஜனங்கள் திகைத்து விட்டார்கள். உள்ளே நுழைந்து அவரைத் தூக்க ஒருவருக்கும் தைரியம் இல்லை. அந்த வேளையில் எங்கிருந்தோ வந்தான், குவளைக் கண்ணன். தன் உயிரைத் திரணமாக மதித்து, உள்ளே குதித்து, என் தந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தான். பின்னர்க் கேட்க வேண்டுமா? ஜனங்கள் அவரைத் தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்திற்குக் கொண்டு வந்தார்கள். எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாருக்கு விஷயம் எட்டியது. அவர் ஓடி வந்து ஒரு வண்டியில் என் தந்தையைப் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார். குவளைக் கண்ணனும் கூடவே போனான்".

"ஸ்ரீநிவாசாச்சாரியார் பெண் ரெங்காள் என்பவள் எங்கள் வீட்டிற்கு ஓடிவந்தாள். சகுந்தலா! அப்பாவை ஆனை அடிச்சுடுத்து என்று அழுது கொண்டே கத்தினாள். கடவுளே! அந்த ஒரு நிமிஷம் என் உள்ளம் இருந்த நிலையை எதற்கு ஒப்பிடுவேன்? - அப்பாவை ஆனை அடிச்சுடுத்து - ரெங்காவுடன் பார்த்தஸாரதி கோயில் வாயிலுக்கு ஓடினேன். அதற்குள் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விட்டார்கள். எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாது, என்ன செய்வது?"

"திருவல்லிக்கேணியில், விக்டோரியா ஹாஸ்டலில் என் தாயாரின் இளைய சகோதரர் வசித்து வந்தார். அவரைப் போய் அழைத்து வருவதற்காக விக்டோரியா ஹாஸ்டலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு அவர் குடியிருந்த அறை நெம்பர் தெரியாது. ஒருவாறு தேடிக் கண்டுபிடித்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தேன். ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருப்பார்கள் என நினைத்து அவர் அங்கு சென்றார். பின்பு நான் வீடு திரும்பி வந்தபோது என் தந்தையை வீட்டுக்குக் கொணர்ந்து விட்டிருந்தார்கள். மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால் ஏற்பட்ட காயம். தலையில் நல்ல பலமான அடி. மண்டை சிதைவுற்று இருந்தது. நல்ல காலமாக அவரது பெரிய தலைப்பாகையிருந்தபடியால் தலை தப்பிற்று."

"என் தந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லையெனக் கேட்டு என் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது. காயங்கள் சிறிது குணமடைந்து அவர் திரும்ப வேலைக்குச் செல்லப் பல நாள்களாயின. யானை அவரைத் தள்ளிய சில காலத்திற்கெல்லாம் ஏதோ ஓர் பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக என் தந்தை தனிமையாக நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் படம் (தாடியில்லாமல்) எடுக்கப்பட்டது. யானை தள்ளிய கதையையும், தம் சொந்தக் கற்பனையையும் சேர்த்துக் "காளி கோயில் யானை" என்ற கதையொன்று எழுதியிருந்தார். அது சுதேசமித்திரனில் பிரசுரிக்கப் பட்டிருந்தது."

"யானை மதம் பிடித்தபோது கீழே தள்ளியதையும் அவர் பொருட்படுத்தவில்லை. உடம்பு சற்று குணமானதும் வழக்கம்போல யானைக்குத் தேங்காய் பழம் வாங்கிக் கொடுப்பதையும் நிறுத்தவில்லை. மதம் தெளிந்து சுய அறிவு திரும்பப்பெற்ற யானையும் தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்பது போல, என் தந்தையைக் கண்டவுடன் தும்பிக்கையை நீட்டி அழைக்கும். ஆறறிவு படைத்த மனிதர்களைப் போலவே மிருகங்களும் அவர்மீது பாசம் காட்டின".

மகாகவியின் இறுதி நாட்கள்
"என் தந்தையார், தமக்கு உகந்த தொழிலான பத்திரிகைக்கு வியாசம் எழுதுவதிலும், பாட்டுகள் புனைவதிலும், நண்பர்களுடன் சல்லாபம், கடற்கரைக் கூட்டங்கள், நிபுணர்களுடன் சங்கீத ஆராய்ச்சி முதலியவற்றாலும் சிறிது மனச்சாந்தி பெற்றவராகக் கூடியவரை உற்சாகத்துடன் இருந்து வந்தார். ஆனால் யானையினால் தள்ளப்பட்டு நோயில் வீழ்ந்த பின், அவரது உடல்நிலை அத்தனை திருப்திகரமானதாக இல்லை. மிகுந்த பலஹீனமாகவே காணப்பட்டார். ஸ்ரீ வ.வெ.சு.ஐயர் 'தேசபக்தன்' பத்திரிகையை அப்பொழுது நடத்தி வந்தார். அவரும் அடிக்கடி என் தந்தையாரைச் சந்தித்துப் பேசுவார். சில சமயங்களில், காலை வேளையில் தெருக்கள் தோறும் பஜனை செய்துகொண்டும் போவோம். என் தந்தை ஒரு அடி பாடுவார். நாங்கள் அதைத் திரும்பப் பாடுவோம். ஸ்ரீ ஐயருக்குப் பாடத் தெரியாது. எனினும் ஆவல் மிகுதியால் கூடியமட்டில் எல்லோருடனும் சேர்ந்து பாட முயல்வார். திருவல்லிக்கேணியில் சில பெரிய தெருக்கள் வழியாகச் சென்று பார்த்தஸாரதி கோயில் வாசலில் வந்து பஜனை முடிவடையும்."

"இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருந்தபோது என் தந்தையார், திடீரென வயிற்றுக் கடுப்பு நோயால் பீடிக்கப்பட்டார். ஏற்கனவே, மிகுந்த பலஹீனமடைந்த உடலானபடியால் வியாதியின் கடுமையைத் தாங்கமுடியவில்லை. உற்ற நண்பர்கள் சிலர் எப்பொழுதும் வந்து கூட இருந்து உதவினார்கள். ஸ்ரீ வ.வெ.சு.ஐயரைத் 'தேசபக்தன்' ஆசிரியர் என்ற ஹோதாவில் அவரது பத்திரிகையில் வெளியான கட்டுரை ராஜத் துவேஷம் உள்ளது என்ற குற்றத்திற்காகக் கைது செய்தார்கள். ஸ்ரீ ஐயர், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகுமுன், வாரண்டுச் சேவகர்கள், போலீஸ் உத்தியோகஸ்தர்கள், மற்றும் சில நண்பர்கள் யாவரும் பின் தொடர நோயுற்றுப் படுத்த படுக்கையாக இருந்த என் தந்தையாரிடம் கடைசி முறையாக விடை பெற்றுச் சென்றார்."

"கடைசிவரை, தாம் பிழைத்தெழுந்து விடுவோம் என்றுதான் என் தந்தை எண்ணியிருந்தார். சாகாதிருக்கும் வழியைப் பற்றிச் சதா காலமும் பிரசங்கம் புரிந்தவருக்குச் சாக மனம் வருமா? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம், பதினொன்றாம் தேதி - சாயங்காலம், விளக்கேற்றும் நேரம், 'இன்றிரவு, தப்பினால்தான் பிழைப்பார்' - அதாவது, இனிமேல் நம்பிக்கையில்லை - என்று வைத்தியர் சொல்லிவிட்டார். எது நேருமோ வெனக் கிலி பிடித்த மனத்துடன், என் தந்தை படுத்திருக்கும் அறை வாயிலில் உட்கார்ந்திருந்தேன். சில நாட்களாகவே என் தந்தையார் மருந்து சாப்பிட மறுத்து விட்டார். மிகுந்த சிரமத்துடன் கட்டாயப் படுத்தித்தான் மருந்து கொடுக்க வேண்டி வந்தது. அன்று, "அப்பாவுக்கு மருந்து நீ கொடுத்தால், ஒருவேளை கோபிக்காமல் சாப்பிடுவார்" என்று என் தாயார் என்னை மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்தென்று நினைத்து, பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த 'பார்லி' தண்ணீரை அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாமென்றார். உடனே அவர் மனத்தில் என்ன தோன்றியதோ? என் கையிலுள்ள கிளாஸை வாங்கி ஒரு வாய் குடித்தார். "பாப்பா! நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா! கஞ்சி!" என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார். எனக்கு மறுபடியும் அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கிவிட்டேன் போலும்!".



: பாரதியின் கடிதங்கள்
మొత్తం 2 టపాలు చూపిస్తున్నాము.

Chandramohan


கடிதம் -1 - 1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது.

He Assured Chllama that he will never deviate from the righteous path.

(கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)

ஒம்
ஸ்ரீகாசி
ஹனுமந்த கட்டம்


எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னை சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷ முறுவேன்


உனதன்பன்
சி.சுப்ரமணியபாரதி
****


கடிதம் 2 எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கு கடிதம். 1919


கடயம்.
30 ஜனவரி. 1919


ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையததாகயிருக்கிறது.


இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக்கூடிய தொகையை ஸ்ரீமான் சி. சுப்ரமணிய பாரதி பழைய கிராமம் கடையம் என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னம்மாச் சித்தி மூலமாக வேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்


உனக்கு மகாசக்தி அமரத்தன்மை தருக


உனதன்புள்ள
சி. சுப்ரமணிய பாரதி.

( இந்த கடிதம் பெற்ற வெங்கடேசுவர எட்டுத்தேவர் பாரதியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். சமவயது நண்பர். கடையம் வந்ததும் தனது மைத்துனர் அப்பாதுரையின் வீட்டில் தங்கியிருந்த பாரதி கடையம் ராமசாமி கோவிலுக்கு வடக்கே பட்டர்வீடு என்ற ஒட்டுக்கட்டடத்துக்கு குடியேறுகிறார். இதை பற்றிய விபரங்கள் தான் கடிதத்தில் உள்ளது. ஜமீன்தார் பொருளதவி செய்து உதவினாரா என்ற தகவல்கள் தெரியவில்லை.)


***


கடிதம் 3 பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு கடிதம் 1915


ஒம்
புதுச்சேரி
19 ஜுலை 1915


எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக


தம்பி - மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள் , நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் - ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்


நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை


ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்


தம்பி - நான் ஏது செய்வேனடா


தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது


தம்பி - உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு! ஏறு ! மேலே! மேலே! மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி


உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே! மேலே!
**


தம்பி - தமிழ்நாடு வாழ்க என்றெழுது


தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது


தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது


அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது


தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது


ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது


அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது


பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது


பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது


தொழில்கள், தொழில்கள் என்று கூவு


தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.


வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக


முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு


சக்தி ! சக்தி! சக்தி! என்று பாடு


தம்பி - நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை ? நீ வாழ்க.


உனதன்புள்ள
பாரதி
**
பாரதியாரின் கடிதங்கள் பாரதி ஆய்வாளர்களில் முக்கியமானவரான ரா. அ. பத்மநாபனால் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவந்திருக்கிறது. நான் அடிக்கடி பாரதியின் படைப்புகளை வாசிக்க கூடியவன். மனம் சோர்வுறும் நேரங்களில் பாரதியை வாசித்தால் மிகுந்த உத்வேகம் கிடைக்கும் என்பதை என் அனுபவத்தின் வழியே பலமுறை உணர்ந்திருக்கிறேன்.


பாரதியின் கடிதங்கள் மிக அபூர்வமானவை. இந்த கடிதங்களின் அடிநாதமாக அன்றாட வாழ்வின் சிக்கல்களில் உழன்றபடியே தன் பெருங்கனவை சுமந்து கொண்டிருந்த கவியின் பெருவாழ்வு வெளிப்பட்டுள்ளது.


தனது புத்தகங்களை சிறப்பாக பதிப்பிக்கவும், அதை முறையாக விநியோகம் செய்யவும் தமிழ் மொழியின் வளரச்சியை உலகம் அறிய செய்யவும் பாரதிக்கு இருந்த விருப்பங்கள் இந்தக் கடிதங்களில் மிக வலிமையாக வெளிப்பட்டுள்ளது

பாரதியின் இந்த மூன்று கடிதங்களும் மிக முக்கியமானவை. முதல் கடிதத்தில் அவர் தன் மனைவியை காதலியாக அழைப்பதும் அவளது மனக்கவலையைப் போக்க உள்ள அருமருந்து தமிழ் படிப்பது ஒன்று தான் என்று சுட்டிக்காட்டுவதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று


இரண்டவாது கடிதம் சிறிய கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குமளவு கூட பொருளாதார வசதியின்றி அவர் சிரமப்பட்டதும் பொருளதவிக்காக எதிர்பார்த்திருந்ததும் வெளிப்படுகிறது. இந்த கடிதத்தில் உதவி கேட்பது தனிமையாக இருக்கும் போது கேட்கவும் என்ற வரி முக்கியமானது. அது போலவே அமரத்தன்மை பெறுக என்று ஆசி தரும் பாங்கும் அற்புதமானது


பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் பாரதியின் சத்தியவாக்குகள். அவரது உள்ளத்தில் இருந்த கோபம் அப்படியே பீறிடுகிறது. பரலி சு. நெல்லையப்பர் சுதந்திர போராட்ட வீரர். 1910ம் ஆண்டு திருவாசகம் நூலை இரண்டனாவிற்கு மலிவுப்பதிப்பாக்கி பல்லாயிரம் பிரதிகள் விற்றவர். பதிப்பு துறையில் நல்ல அனுபவம் பெற்றவர். இவரது சகோதர் சண்முக சுந்தரம் பிள்ளை. வ.உ.சியின் நெருங்கிய தோழர். சுதேசி கப்பல்கம்பெனி உருவாவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள். பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் கண்ணன்பாட்டு, நாட்டுபாட்டை புத்தமாக்கி வெளியிட்டார். லோகோபகாரி என்ற வார இதழை நடத்தியுள்ளார். பாரதி பாடல்களை லட்சக்கணக்கில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர்.


கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் சொற்களும் அதன் உணர்ச்சி வேகமும் கடிதத்தின் வழியாக ஒலிக்கும் அவரது குரலும் தனிச்சிறப்பு கொண்டவை.
இந்த கடிதத்தில் பாரதி பயன்படுத்தும் ஜாதி என்ற சொல் இன்று நாம் குறிக்கும் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தபடவில்லை. வாய்விட்டு இந்த கடிதத்தினை வாசித்து பார்த்த போது அடையும் உணர்ச்சி பெருக்கு அலாதியானது.


**

-நன்றி : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Bharathar's Marriage

பாரதி திருமண வைபவம்


1897ம் வருஷம் ஜ?85;் மாதம் பாரதிக்கும், செல்லம்மாளுக்கும் அதிவிமரிசையாக நாலு நாள் கல்யாணம் நடந்தது.

அந்தக் கல்யாண விமரிசையைச் செல்லம்மா பாரதி பின்வருமாறு விவரிக்கிறார். ""கிருஷ்ண சிவன் (பாரதியின் அத்தை கணவர்) அவர்களின் நண்பர்களான ராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும், சேத்தூர், தலைவன்கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும், பட்டும் பட்டாவளியுமாகச் சால்வைகள், மோதிரங்கள், முத்து மாலைகள் முதலிய வெகுமதிகள் ஏராளமாய் வந்தன. தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை ராமநாதபுரம் ராஜா அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்தச் சமயம் கியாதியடைந்திருந்த திருநெல்வேலி அம்மணி பரதநாட்டியம். பாரதியாருக்கு பால்ய விவாகத்தில் அவ்வளவாகப் பிரியமில்லாவிடினும், ரசிக்கத் தகுந்த கேளிக்கைகள் மிகுதியாயிருந்தமையால் விவாகத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார். அப்போது பாரதிக்கு வயது பதினாலரை. செல்லம்மாளுக்கு வயது ஏழு.

விவாகமானவுடன் கணவன் மனைவி பேசுவது வழக்கமாக இல்லாத அந்தக் காலத்திலேயே, பாரதி தமது புதிய கருத்துக்களைக் காட்டத் தொடங்கினாராம். எல்லோருக்கும் எதிரில்,

""தேடக் கிடையாத சொன்னமே ?;யிர்ச்
சித்திரமே! மட அன்னமே!....
கட்டியணைத் தொரு முத்தமே ?;ந்தால்
கை தொழுவேன் உனை நித்தமே''

என்று காதல் பாட்டுகள் பாடினாராம்.

""நான் நாணத்தால் உடம்பு குன்றி, எல்லாரையும் போல் சாதாரணமான ஒரு கணவன் கிடைக்காமல், நமக்கென்று இப்படி ஓர் அபூர்வமான கணவர் வந்து வாய்க்க வேண்டுமா என்று எண்ணித் துன்புறுவேன். கிராமத்தில் பழகிய, ஒன்றும் தெரியாத ஏழு வயதுச் சிறுமிக்குக் கவிஞர்களின் காதல் ரஸ அனுபவம் எப்படிப் புரியும்?'' என்று செல்லம்மாள் கூறுகிறார். மேலும்,

""விவாகத்தின் நாலாம் நாள், ஊர்வலம் முடிந்து, பந்தலில் ஊஞ்சல் நடக்கிறது. ஓர் ஆசுகவி இயற்றினார். அதை இனிய ராகத்தில் பாடி, பொருளும் உரைத்துக் குட்டிப் பிரசங்கம் ஒன்றும் செய்தார். கல்யாண விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும். என் தகப்பனார் கல்யாணத்திற்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்வான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது. அதைக் கேட்டு யாவரும் "பலே பேஷ்!' என்று ஆரவாரித்து, "மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்தது போல் வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி!' என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம் பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார்.''


WHO IS KUVALAI KANNAN??

குவளைக் கண்ணன் குறிப்புகள்

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் புதுவையில் பாரதியுடன் இருக்கும்போது, ""மகான்கள் தீர்க்காயுசா யில்லாமல் போய்விடுகிறார்கள்? பாரதியாரே, அதற்குக் காரணம் என்ன?"" என்று கேட்டேன்.

""மகான்கள் பூலோகத்திற்குத் தேவ தூதர்கள். ஜனோபகாரார்த்தமாக அவர்கள் உதிக்கிறார்கள். பூலோகத்தில் அவர்கள் வந்த காரியம் ஆனதும் அவர்கள் இவ்வுலகத்தில் நிற்க மாட்டார்கள். மறைந்துவிடுவார்கள்"" என்றார். அவர் வாக்கையும் அனுபவத்தையும் கவனித்தால், அது சரியென்றே தோன்றுகிறது.

ஏனென்றால், ஸ்ரீ விவேகானந்தர் நாற்பதாவது வயதில் காலமானார். அவருடைய சிஷ்யையும் வேத புத்திரியுமான சகோதரி நிவேதிதா தேவி, தமது நாற்பதாவது வயதில் காலமானார். நிவேதிதாவுக்குச் சிஷ்யரான பாரதியும் நாற்பதாவது வயதில் காலமானார். இவ்விதம் குரு பரம்பரை காலமான விஷயம் அதிசயமாக இருக்கிறது.

புதுவையில் அவர் எங்கேனும் நடந்து செல்லும்போது, பாரதியாருடன் நானும் போக விரும்பி நடந்தால், அவருக்குச் சரியாக என்னால் நடக்க முடியாது. அவருக்கு வீதிகளில் மெதுவாக நடக்கத் தெரியாது; எனக்கு அவசரமாக நடக்க முடியாது. எனவே, என் ஓட்டம் அவர் நடைக்குச் சரியாக இருக்கும்.

புதுவையில் அவர் எழுதிய "பாஞ்சாலி சபத"த்தின் முதல் பாகத்தை ஒரு ஜமீன்தாரிடம் படித்துக் காட்டினேன். அவர் அதிசயமாக கேட்டுக்கொண்டிருக்கையில், அவருடன் இருந்த அவரது காரியதரிசி, என்னை, ""இந்தப் புத்தகம் யார் எழுதியது?"" என்று கேட்டார். அதற்கு நான், ""பாரதியார் பாடியது"" என்று சொன்னேன்.

அவர், ""பாரதி எந்த ஊர்?"" என்றார்.

""அவர் எட்டையபுரம்"" என்றேன்.

""இப்படிப்பட்ட பாடல் எழுதியவர் எட்டையபுரம் அல்ல"" என்று அவர் சொன்னார்.

காரியதரிசி அப்படிச் சொன்னதற்கு, நான் ""இல்லை ஐயா, அவரே பல தடவைகளில் தாம் எட்டையபுரம் என்று சொல்லி யிருக்கிறாரே?"" என்றேன்.

""கிடையாது; அவர் எட்டையரும் இல்லை. வேண்டுமானால் நீர் நேராகப் போய் இந்தத் தர்க்க சந்தர்ப்பத்தைச் சொல்லி, இன்னொருதரம் கேளும்; என்ன சொல்கிறார், பாரும். இருந்தாலும் நான் சொல்லுகிறேன், கேளும். இப்படிப்பட்ட பாட்டு எழுதியவரின் ஊர், பாஞ்சாலங் குறிச்சியாகத்தான் இருக்க வேண்டும். பாஞ்சாலங் குறிச்சி தவிர, மற்ற ஊர்களில் பிறந்தவர்களால் இப்படிப்பட்ட வீரப் பாட்டு எழுத முடியாது"" என்றார்.

அந்தக் காரியதரிசியின் சொல்லில் கொஞ்சம் சந்தேகப்பட்டு நான் பாரதியாரிடம் சென்று, ""ஐயா, தாங்கள் எந்த ஊர்?"" என்று கேட்டேன்.

""என்ன கிருஷ்ணா, அடிக்கடி எந்த ஊர் என்று கேட்கிறாய்? எட்டையபுரம், எட்டையபுரம் என்று எத்தனை தடவை சொல்லுவது!"" என்றார். அதன் பேரில் நான் மேற்படி ஜமீன்தார் வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னேன். பிறகு புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே, ""அந்த ஓரந்தான்"" என்றார் பாரதியார். எட்டையபுரம் ஓரந்தானாம் பாஞ்சாலங்குறிச்சி.

ஒரு நாள் பாரதியாரை, ""ஐயா, இந்த ஊரில் நல்ல மடு ஒன்று கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. தாங்கள் தினம் அங்கு ஸ்நானத்திற்கு வர முடியுமா?"" என்று கேட்டேன்.

""எங்கே? எங்கே?"" என்று அவர் பரபரப்புடன் கேட்டார்.

""நமது வீட்டிற்கு மேற்கே சுமார் இரண்டு மைல் தூரத்தில், அந்த மடுவிற்கு விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் சென்றால்தான், நிம்மதியாகக் கும்பலில்லாமல் ஸ்நானம் செய்யலாம்"" என்றேன்.

""விடியற்காலம் நீ எப்பொழுது வந்து எழுப்பினாலும், உன்னுடன் வருகிறேன். தப்பாமல் விடியற்காலையில் வீட்டில் வந்து என்னை எழுப்பு"" என்றார் பாரதி.

அவர் சொன்னபடி மறுநாட் காலையில் நாலு மணிக்கு அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன்.

""யார்?"" என்றார் பாரதியார். ""ஏன்?"" என்றேன். உடனே சந்தோஷமாக எழுந்து வந்து கதவைத் திறந்து என் கூடவே மடுவுக்குக் கிளம்பினார். போகும் மார்க்கத்தில், இவர் வீட்டிற்கும் மடுவிற்கும் இடையில் ரஸ்தாவிற்கு இரு புறத்திலும் நஞ்சை வயல்களும் தென்னந் தோப்புகளும் இருந்தன. இவற்றின் செழுமையையும், பிரகிருதீய அழகு ஆனந்தங்களையும் ---பிறப்பிலேயே வரகவியாதலால் எனக்குத் தெரியாமலேயே தாம் கவனித்து கவனித்து, குயில் பாட்டுக்கு அடிப்படை தேடிக்கொண்டார்.

அன்று அவரும் நானும் ஒரு மடுவில் ஸ்நானம் செய்தோம். இவ்வாறு இரண்டு நாள் ஆயிற்று. மூன்றாம் நாள், நான் அவர் வீட்டிற்குப் போகாமையால் அவர் என் வீட்டிற்கு விடியற்காலையில் நடந்துவந்து கதவைத் தட்டி எழுப்பினார். உடனே நான் விழித்து, குரலிலிருந்து பாரதி என்று தெரிந்து, என் தாயாரிடம் அம்மா, ""இவர்தானம்மா பாரதி"" என்றேன்.

என் தாயார் உடனே கதவைத் திறந்து, பாரதியை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னாள். பிறகு, ""பையா! பாரதி, பாரதி என்றாயே, அவரைச் சுப்பிரபாதம் சொல்லச் சொல்லு, பார்ப்போம்"" என்றாள்.

அதற்குப் பாரதியார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன?"" என்று கேட்டார்.

உடனே என் தாயார், ""சுப்பிரபாதம் என்றால் என்ன என்கிறாரே! இவ்வளவுதானா உன் பாரதி!"" என்றாள்.

இதனிடையே நேரமாகவே, நாங்களிருவரும் மடுவுக்குப் புறப்பட்டோம். பாரதியாருக்கு மனதில் நிம்மதியில்லாமல் "சுப்பிரபாதத்திற்கு" என்னை அர்த்தம் கேட்டார்.

""சமஸ்கிருத சுப்பிரபாதம், தமிழில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி"" என்றேன். திருப்பள்ளியெழுச்சியில் ஒரு பாட்டுச் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன். அதைக் கேட்டு, அதே மாதிரியாகப் "பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி"யை எழுதி, என் தாயாரிடம், அந்தப் பாடல்களை நேராக முதல் முதலில் பாடிக் காட்டினார்.

பாதியார் வீட்டில் நான் நாலாயிரப் பிரபந்தம் பாராயணம் செய்வதுண்டு. அவர் மெ?5;மாக ஆழ்ந்த கவனத்துடன் பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சமயம், என்னை மெ?5;மாகப் பாராயணம் செய்து கொள்ளும்படியாகச் சொன்னார்.

அதற்கு நான், ""ஐயா, எழுதும் காரியம் தங்களுடையது. படிக்கும் காரியம் என்னுடையது. அவாளவாள் காரியத்தை அவாளவாள் ஏககாலத்தில் கவனத்துடன் செய்துவந்தால், யாருக்கு என்ன நஷ்டம்?"" என்றேன்.

அதற்கு அவர், ""நீ சத்தம் போட்டுப் படிப்பதால், நான் எழுதும் காரியத்துக்குத் தடையாக இருக்கிறது"" என்றார்.

அதற்கு நான், ""ஐயா, நீங்கள் மற்ற மனிதர்கள் மாதிரி சாதாரண மனிதராக என் புத்தியில் படவில்லை. ஆகையால்தான், தாங்கள் எழுதும் போது நானும் கூசாமல் பாராயணம் செய்து வருகிறேன். ஏககாலத்தில் ஒரு காரியத்திற்கு மேல் காரியங்கள் செய்யவல்ல சக்தி தங்களிடம் இருப்பதாக எண்ணி நான் படித்து வருகிறேன்"" என்றேன்.

உடனே அவர், ""நான் உன் வழிக்கு வருவதில்லை. நீ எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்"" என்றார்.

ஒரு நாள் பாரதியார், ""கிருஷ்ணா, இந்த நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள் சேர்ந்து பாடியது?"" என்று கேட்டார்.

""பத்து ஆழ்வார்களின் பாடல்களெல்லாம் சேர்ந்து ஒரு நாலாயிரப் பிரபந்தம்"" என்றேன்.

""பத்து ஆழ்வார்கள் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களே! நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன், பார்!"" என்றார்.

""உங்கள் ஒருத்தரால் ஆறாயிரம் பாட முடியாது. ஏனெனில், கலி முற்ற முற்ற மனிதனுக்கு ஆயுசு குறைவு. கலி முற்றிய காலத்துச் சிறிய மனிதர்கள் நாம். ஆகையினால் முடியாது"" என்று நான் சொன்னேன்.

""நல்லது பார்"" என்ற அவர், பாரதி ஆறாயிரம் என்று ஒரு நூல் எழுத ஆரம்பித்தார். இதனிடையில் குடும்பக் கவலை, சள்ளை, வறுமை, வியாதி, முடிவில் மரணம். ஆறாயிரம் பாடல்கள் பூர்த்தியாகவில்லை. அறுபத்தாறுதான் பாடி முடிந்தன. அவர் காலத்திற்குப் பின் இதை அச்சிட்டவர்கள் பாடல்களைக் கணக்கிட்டு இந்த நூலுக்கு "பாரதி அறுபத்தாறு" என்று பெயரிட்டு அச்சிட்டார்கள் போலும்.

""ஐயா, பாரதியாரே! உங்கள் கொள்கைகள், கருத்துக்கள் எல்லாம் எனக்குத் திருப்திகரமாக இருக்கின்றன. தாங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்வதும், நான் சொல்வதைத் தாங்கள் ஒப்புக்கொள்வதும் நமக்குள் இயல்பாக இருக்கிறது. ஜனங்களில் பலர் நாம் தப்பிதமான கொள்கைகளை வைத்திருப்பதாகச் சொல்லுகிறார்களே. அதற்கென்ன சொல்லுகிறீர்கள்?"" என்று நான் ஒரு சமயம் கேட்டேன்.

""நாம் இப்போது சொல்லுபவற்றையெல்லாம் நானூறு வருஷங்கள் கழித்து உலகம் ஒப்புக்கொள்ளும். நாம் இன்னும் நானூறு வருஷங்களுக்குப் பின்னாலே தோன்றவேண்டியவர் முன்னாலேயே தோன்றிவிட்டோம். அதற்கென்ன செய்வது?"" என்று பதிலளித்தார் பாரதியார். அவர் இவ்வாறு சொல்லி 25 வருஷந்தான் ஆகிறது!

(பாரதியாரின் ஆப்த நண்பர் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், "ஹிந்துஸ்தான்" வாரப்பதிப்பின் 1938ஆம் ஆண்டு பாரதி மலரில் எழுதிய சில குறிப்புகள்.)


About Arugur Neelakanta Brahamachari:

பாரதியார் "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடியது
எருக்கூர் நீலகண்ட பிரமச்சாரிக்காக என்கிறது இக் கட்டுரை.

நா. கணேசன்

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"
இது பாரதியின் பாடல், பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக்
கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும். நீலகண்டன். இவர் சீர்காழிக்கு
அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார். எனவே இவரை எருக்கூர்
நீலகண்டன் என்று அழைப்பார்கள்.

சென்னையில் வங்கப் பிரிவினைக்கு எதிராக மெரினா கடற்கரையில் பேசிய விபின்
சந்திரபாலின் ஆவேச முழக்கம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையான
அமைந்தது. இச்சமயத்தில் தான் வ.உ.சி தன்னுடைய சுதேசி கப்பல் நிறுவனத்தை
துவங்கினார். கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்கும் முழுநேர
விற்பனையாளராக வேலையில் சேர்ந்தார். பாரதியாரின் உதவியோடு புரட்சி
இயக்கத்தில் சேர்ந்து புரட்சியாளராக மாறினார்.

பாரதமாதா சங்கம்

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கு கொண்ட மிகப் பெரிய புரட்சிவிரன்
நீலகண்ட பிரம்மச்சாரி. இவர் துவக்கிய பாரதமாதா சங்கத்தில் உறுப்பினராகச்
சேருவதற்குரிய விதி முறையைப் பாருங்கள்!

காளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்து நீரை கையில் எடுத்து
வெள்ளைக்காரர்களின் ரத்ததைக் குடிப்பதாகச் சொல்லி பருக வேண்டும். பின்பு
கத்தியால் அவரவர்களின் வலது கை கட்டை விரலின் நுனியை அறுத்துக் கொண்டு
வழியும் ரத்தத்தை அங்குள்ள வெள்ளைக் காகிதத்தில் ரேகைக் குறியிட்டு
அடையாளம் செய்ய வேண்டும்.

என்ன பேராபத்து நேர்ந்தாலும் சங்க ரகசியங்களை வெளிநபருக்குத்
தெரிவிக்கக்கூடாது. எதிர்பாராத சந்தர்ப்பத்தில் போலீசில் மாட்டிக்
கொண்டால், தேவையானால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு உயிரை விட
வேண்டும். இது தான் உறுப்பினர்கள் ஏற்கும் சபதமாகும்.

நீலகண்ட பிரம்மச்சாரி மூலம் வாஞ்சிநாதன் சுதந்திரப் போராட்டத்தில்
தீவிரமாக பங்கேற்கிறான். மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷை
வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று விட்டு தன்னைத் தானே சுட்டு உயிரை
மாய்த்துக் கொள்கிறார். நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு பெரிய புரட்சிப் படையை
உண்டாக்கி 1857ல் நடந்தது போன்ற மிகப் பெரிய புரட்சியை ஒரே நேரத்தில்
நாடு முழுவதும் உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார். தனி நபரைக் கொலை
செய்வதில் அவருக்கு உடன்பாடு கிடையாது.

வாஞ்சிநாதனை ஆஷ் கொலைக்கு தயார் செய்து அனுப்பியது வ.வே.சு.ஐயர்தான்.
தவிர நீலகண்டனுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஆஷ் கொலையில்
சம்மந்தப்பட்டாத நீலகண்ட பிரம்மச்சாரி முதல் குற்றவாளியாகச்
சேர்க்கப்படுகிறார். பெல்லாரி சிறையில் 71/2 ஆண்டுகள் சிறைவாசம்
அனுபவித்தார். விடுதலை பெற்றவுடன் சென்னைக் வந்தார்.

பிச்சை எடுக்கும் நிலை

பகல் முழுவதும் சுதேசி பிரச்சாரம் செய்தார். தங்க இடம் இல்லை. உணவு
கொடுக்க யாருமில்லை. பசி, பட்டினியால் உடல் தளர்ந்தது. இரவு நேரத்தில்
ஒரு போர்வையால் முகத்தை எல்லாம் மூடிக் கொண்டு சில வீட்டு வாசலில் நின்று
கொண்டு," அம்மாராப்பிச்சைக்காரன் வந்துள்ளேன், பழைய சோறு இருந்தால
போடுங்களம்மா" என்று பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

சில நாட்கள் கழிந்தன. அவருடைய மனதில் "இது என்ன கேவலமான பிழைப்பு?" என்ற
எண்ணம் தோன்றி பிச்சைக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டார். மூன்று
நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்தார்.

பாரதியின் பாடல்
அப்போது பாரதியாரும் திருவல்லிக்கேணியில் தான் தங்கியிருந்தார்.
பாரதியாரைப் பார்த்தாவாவது ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று நினைத்து
பாரதியைத் தேடிவந்தார். நீலகண்டனைப் பார்த்து பல வருஷங்கள் ஆனதால்
பாரதிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

"பாரதி ..... நான்தான் நீலகண்டன்" என்று சொன்னவுடன் நினைவு வந்தவராய்
பாரதி ஆசையோடு, "டேய் பாண்டியா எப்படி இருக்கிறார்? என்று அவரைக் கட்டிப்
பிடித்து ஆரத் தழுவினார்.

"பாரதி எனக்கு ஒரு நாலணா இருந்தால் கொடேன், நான் சாப்பிட்டு நான்கு
நாளாச்சு" என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பாரதி, அவரை
அழைத்துக் கொண்டு போய் முதலில் சாப்பிட வைக்கிறார்.

அப்போது தான் பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சி மிக்க பாடல்
"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று
பாடுகிறான்.

எனக்காக பாரதி ஒரு பாடலை பாடிவிட்டானே" என்று மனம் நெகிழ்ந்தார்
நீலகண்டன்.பாரதியின் மரணச் செய்தி கேட்டு நீலகண்டன் ...


The Hindu 03-09-2011
Bharati's legacy
K.R.A. Narasiah
Share

Long after Subramanya Bharati's death, his poetic legacy continued to be contested by the eminent literary personalities of the time. A look at the debate.
When Bharati passed away on September 11, 1921, The Hindu carried a tribute to Bharati from S. Satyamurthi:
“Had he been born in England he would have been the poet laureate and been adored by his race. Had he born in any other free country, he would have risen to such heights of eminence that he would have lived longer and enriched his language and race more than he was able to do here. Had he born even in Bengal, he would have been a Rabindranath Tagore. Those who know his poems will know I am indulging in no exaggeration. But born in India and in Tamil India Subramania Bharati had to spend the best part of an all too short life an exile from those who were near and dear to him. No wonder that he pined and suffered and has gone to a premature grave. So long however as the Tamil language lives and there is a spark of patriotism in Tamil India, Subramania Bharati's songs will live.”
There were very few at the funeral, and V. Chakkarai Chettiar, Krishnswamy Sharma and Ramachandra Aiyar spoke in Tamil while Surendranath Arya paid tributes in Telugu. The pyre was lit by Harihara Sharma, a relative and while the mortal remains were consumed, the fire he lit in the minds of the people continued to glow.
However, due recognition to Bharati came much later, but even then with such debates that made one feel that Tamil India had not remembered Bharati well enough!
One such debate took place in 1935, and the dramatis personae were, Va. Raa, Kalki R. Krishnamurthy, Chitti Sundararajan and Ku. Pa. Rajagopalan.
Keen reformer
Va. Ramaswami Aiyangar (Va. Raa) was a close associate and a great admirer of Bharati. Va. Raa. wrote in simple readable Tamil and his novel Sundari was a path breaker in which he brought out the ordeals of a Hindu widow, showing him to be an idealist and a social reformer. After editing Swatantram, a weekly from Thanjavur, he joined Dr. P. Varadarajulu Naidu to run the Tamil journal Thamizh Nadu. Va. Raa was the first biographer of Bharati.
But the best period of his life was editing Manikkodi, the renascent Tamil journal that was started by Stalin K. Srinivasan. T.S. Chokalingam was the publisher and the leading Tamil writers of the time took pride in writing for it. After he left Manikkodi, he joined the Veera Kesari, a daily from Colombo, in October 1934, as desired by V.O.Chidambaram Pillai.
In “Three days with Va. Raa.” an article that appeared in Manikkodi, (August, 1934) N. Ramarathnam, another Manikkodi writer, mentions what Va. Raa. seem to have stated during one of his campaign speeches: “I have read the great poets of English, Shelly and Shakespeare and India's Nobel Laureate Tagore, but I can say that all the writings of them put together will not equal a line of what Bharati had written”. Quoting Va. Raa's views, P. Sri Acharya, writing under the name of Nellai Nesan, disputes this view and says “Bharati is a good poet but not a great poet” (Dinamani 1935 Bharati Malar).
On November 3, 1935, in its Letters to the Editor column, Ananda Vikatan, edited by Kalki Krishnamurthy, had published a letter supposedly written by a “Student of Literature” (it was the editor Kalki himself!) in which a question was raised whether what was said by some one in Karaikudi (the name of Va. Raa was omitted) is correct, as the correspondent felt it was not.
Commenting on the letter the editor had given his views: “The name of the person was also given. I have omitted the name purposely, as I think he could not have said so.” Continuing, the editor says, “If someone had said so, it should be understood as this person does not have any idea about either literature or poetry. It is possible to conclude that he is an illiterate (Nirakshara kutchi). It is doubtful if he had read Shelly, Tagore and Shakespeare and if he had, probably he has not understood them. It is also doubtful, if he has understood even Bharati properly” (courtesy Anada Vikatan).
Opposing views
Va. Raa followed up with a detailed essay titled “Bharati and literary review” in Swadesamithran on November 30, 1935 and Kalki openly wrote opposing his views in the same journal on December 7, 1935, in which he went on to say that if Tolstoy had read “Vallippaattu” of Bharati, he would have burnt all the works of Bharati!
In the meanwhile, Va. Raa wrote from Colombo to Ku. Pa. Rajagopalan lamenting that no one ha objected to Kalki's statement that Bharati is a good but not great poet. Then followed long articles by Chitti and Ku. Pa. Ra., questioning Kalki's statement and the contents were later published under the title Kannan en kavi by Sangu Ganesan in 1937.
Later Kalki became a great admirer of Bharati and took the initiative of building the Manimandapam at Ettayapuram in October 1947 and Rajaji, then the Governor of West Bengal, declared it open. Again, it was Chitti, as a member of the team, who covered the function from Ettayapuram through the All India Radio!

Va ve su Iyer:

From Wiki:
Va ve su Aiyar's militant attitude prompted the British Government in 1910 to issue a warrant for his arrest for his alleged involvement in an anarchist conspiracy in London and Paris. Aiyar resigned from the Lincoln's Inn andescaped to Paris. Although he wished to remain in Paris as a political exile, he had to return to India. Aiyarlanded in Pondicherry on December 4, 1910 disguised as a muslim to escape arrest and remained there as exile.Aiyar remained in Pondicherry for over ten years. While in Pondicherry, Aiyar met with fellow revolutionariesSubramanya Bharathi and Aurobindo. In Pondicherry, Aiyar was involved in the plot to assassinate Mr. Ashe,the Collector of Tirunelveli. One of his students, Vanchinathan assassinated General Ashe. Thus more troublearose for V.V.S. Aiyar and his companion Subramanya Bharathi. On 22 September 1914 the German cruiser SMS Emden
entered the Madras harbour and bombed the city. TheBritish colonial government blamed this on the activities of the exiles in Pondicherry, and urged the FrenchGovernor to deport V.V.S. Aiyar and his companions to Africa. The French police brought several chargesagainst the revolutionaries, but failed to convict them. During this period Aiyar translated the Tirukkural intoEnglish. He later revealed that he wanted to leave a legacy behind if he were forced to leave the country.Aiyar returned to Madras after World War I and worked as the editor of the newspaper Desabhaktan Patriot
-- From Wiki

He edited `Desapakthan' for some time and spread revolutionary political philosophy to the youths through his forceful and fearless articles. Perturbed over the consequences, the British imprisoned him for nine months. He served the term in Chennai and Bellary prisons. But he utilised the jail term to author nine literary works. He also translated Thirukkural and Kambaramayanam into English.
Bharathi, Va.Ve.Su and Madaviah were the trendsetters for authoring short stories in Tamil, hitherto alien to Tamil readers. Iyer founded the `Tamil Gurukulam', an educational institution in Cheranmahadevi with a focus on vocational skills.
Iyer passed away at the young age of 44 on June 3, 1925. The State Government honoured him by converting his house at Varahaneri into a memorial.

Vanchinathan's valour
Many would be aware of the historical episode involving Vanchinathan's valour in shooting down Tirunelveli Collector Ashe in a train at Maniyachi railway station in 1911. All may not be aware of the truth that it was Iyer who trained Vanchinathan to execute the plan in all perfection.
In 1916, Iyer arrived at Pondicherry from London where he imparted training to youths in using arms. He was instrumental in formulating several sedative plans against British in coordination with Poet Bharathi and Sri Aurobindo. He also organised cells for revolutionary activities. Iyer remained in Pondicherry till 1920 and then went to Chennai where he continued his activities.
Iyer was not only a nationalist and revolutionary person, but also a scholar and above all a litterateur. Iyer was a linguist and was well versed in Tamil, English, Sanskrit, Latin and French.

Above Extracts from The Hindu of 16-08-2006


Kannan Natarajan
View profile
More options May 9 2010, 7:04 am
"ஆனந்த விகடன்" உரிமையாளர் எஸ்.எஸ்.வாசனிடம் "கல்கி" கிருஷ்ணமூர்த்தியை
அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பரலி
சு.நெல்லையப்பர். இல்லாவிட்டால், ஒரு வேளை "கல்கி"யின் பெருமை
தமிழ்நாட்டுக்குத் தெரியாமலே போயிருக்கலாம்.



ஏராளமான புலவர்களைப் பெற்றெடுத்த பொருநை வளம் சேர்க்கும் மண்ணில்,
திருநெல்வேலிக்கு அருகே பரலிக்கோட்டை என்ற சிற்றூரில், சுப்பிரமணியம்
பிள்ளை - முத்துவடிவு அம்மையாருக்கு 1889ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
18ஆம் தேதி பிறந்தார்.

பாரதியாரால் "தம்பி" என்றழைக்கப்பட்ட பரலி சு.நெல்லையப்பரின் பெருமை
பரவலாகத் தெரிந்திராத நாள்கள். உரிமையுடன் பாரதி, "தம்பி" என்று பரலி
சு.நெல்லையப்பரை அழைத்ததுபோல் மற்றும் யாரையாவது அழைத்திருக்கிறாரா என்று
தெரியாது.

1908ஆம் ஆண்டு கப்லோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கப்பல்
கம்பெனியில் பரலி சு.நெல்லையப்பர் குமாஸ்தா வேலை
பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் சிதம்பரனாரைச் சந்திக்க பாரதியார்
அவர் வீட்டுக்கு வந்தபோதுதான் முதன்முதலில் பரலி சு.நெல்லையப்பர்,
பாரதியாரைச் சந்தித்தார்.

"ஓய்! நம்மோடு வாரும்'' என்றவாறு பாரதியார், இளைஞர் நெல்லையப்பர்
கரத்தைப் பற்றி வெளியே அழைத்துக்கொண்டு சென்றார். தன்னை உரிமையுடன் கரம்
பற்றி அழைத்துச் சென்றவர் பாரதியார் என்று அப்போது நெல்லையப்பருக்குத்
தெரியாது. பிறகு பாரதியார் தங்கியிருந்த அறையில், கிருஷ்ணசாமி அய்யரின்
உதவியுடன் அச்சிடப்பட்டிருந்த பாரதியாரின் சுதேச கீதங்களைப் படித்த
பிறகே, தன்னை அழைத்துச் சென்றவர் சுப்பிரமணிய பாரதியார் என்பதறிந்தார்.
கப்பல் கம்பெனிப் பணிகளில் மூழ்கியதால் பாரதியாரைப் பற்றி
நெல்லையப்பருக்கு நினைக்க நேரமில்லை. பிறகு அவரைச் சில காலம் கழித்தே
சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

பரலி சு.நெல்லையப்பரைப் பற்றி தமிழ் மக்கள் அறிய வாய்ப்பு இல்லாதபோது,
நீலகண்ட பிரம்மசாரியைப் பற்றி எவ்வாறு அறியமுடியும்! புதுவையில்
பாரதியின் குழுவில் இருந்த பல மேதைகளுள் நீலகண்டரும் ஒருவர்.
திருநெல்வேலி ஆஷ் துரை வழக்கில் சம்பந்தப்பட்ட நீலகண்டரை - நீலகண்ட
பிரம்மசாரி என்று அழைப்பார்கள். சென்னையில், நெல்லையப்பர் தற்செயலாக
அவரைச் சந்தித்தார். சிதம்பரனாருக்கு அரசு அவமதிப்பு குற்றம்
சாட்டப்பட்டு, சிறையில் கொடும் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு இளைஞர்
நெல்லையப்பர் அடுத்து என்ன செய்வது என்று திகைத்தார். தூத்துக்குடியிலேயே
நீலகண்டரை அறிவார்.

அவரைச் சந்தித்த அந்த நேரம் நெல்லையப்பர் வாழ்க்கை வரலாற்றில் ஒரு
திருப்புமுனையாக அமைந்தது.

புதுச்சேரி பத்திரிகைத் தொழிலில் தான் ஈடுபட்டிருப்பதாகவும்,
விரும்பினால் அவருக்கும் பத்திரிகையில் வேலை கிடைக்கும் என்றும், "உடனே
என்னுடன் புறப்படலாம்",என்றும் நீலகண்டர் தெரிவித்தார்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர் பரலி
சு.நெல்லையப்பர். நீலகண்ட பிரம்மசாரியுடன் புதுவை சென்ற நெல்லையப்பர்,
பாரதியாரைச் சந்தித்தார். தூத்துக்குடியில் சந்தித்த பிறகு இரண்டாவது
முறையாக இப்போதுதான் சந்திக்கிறார். ஆனால், இம்முறைதான் பரலி
நெல்லையப்பர், பாரதியாரை முழுமையாக அறிந்தார். அதற்கு வழி வகுத்த
நீலகண்டரை நாம் மிகவும் பாராட்ட வேண்டும்.

பாரதியார் ஆசிரியராக இருந்த "விஜயா" என்ற நாளிதழிலும் "சூரியோதயம்" என்ற
வார இதழிலும் பாரதியாருக்கு உதவியாக - துணையாசிரியராகப் பணிபுரியும்
வாய்ப்பு நெல்லையப்பருக்குக் கிடைத்தது. இதழிகளின் துணை ஆசிரியராகத்
தொண்டாற்றும் வாய்ப்பைவிட, புதுவையில் பல மேதைகளை அறிமுகப்படுத்தி
கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டது.

இளைஞர் நெல்லையப்பரின் சுறுசுறுப்பு, அழகிய கையெழுத்து, அச்சுக்
கோர்த்தவற்றைப் பிழையறப் பார்க்கும் திறமை போன்றவை பாரதியாரை மிகவும்
கவர்ந்தன. அதற்கு முன்பே, விடுதலை வேள்வியில் நம்பிக்கையுடன்
தொண்டாற்றக்கூடிய "நம்பிக்கைக்குரிய வீரர் இந்த இளைஞர்" என்று முடிவும்
செய்துவிட்டார் பாரதியார்.

புதுவையில் இருக்கும்போதுதான் பாரதியார் பல புதிய இலக்கியங்களைப்
படைத்தார். பாஞ்சாலி சபதத்தின் முதல் பகுதி புதுச்சேரியில்தான்
வெளியாயிற்று; பாரதியார் தம் புதிய படைப்புகளை நெருங்கிய நண்பர்களுக்குப்
படித்துக் காட்டுவது வழக்கம். குறிப்பாக பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம்
பகுதியைத் தனக்குப் படித்துக் காட்டினார் என்ற விவரங்களையும் பரலியாரின்
நூல் மூலம் அறியமுடிகிறது.

பாரதியாரின் நூல்கள் அச்சாகும்போது அதன் அச்சுப்பிழையைத் திருத்தும்
பணியைப் பரலி சு.நெல்லையப்பரே செய்துவந்தார்.

சென்னையில் பல இடங்களில் வேலைக்கு முயன்ற நெல்லையப்பர், இறுதியில்
"லோகோபகாரி" பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார்.
லோகோபகாரி இதழில் சேர்ந்தவுடனே புதுவையில் இருந்த பாரதியாருடன் தொடர்பு
கொண்டார். அப்போது சுதேசமித்திரன் பத்திரிகைக்கு மட்டுமே, பாரதியார்
கட்டுரைகள் எழுதிவந்தார். நெல்லையப்பரின் வேண்டுகோளின்படி லோகோபகாரி
இதழுக்கும் பாரதியார் எழுதத் தொடங்கினார்.

பெரும்பாலும் பாரதியாரைப் பற்றிய உரையாடல் நடைபெறும். "பாரதி" என்றொரு
இதழில், (பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நடத்தியது)
பிற்காலத்தில் பணியாற்றியபோது பாரதியாரின் புகழ்பெற்ற கவிதைகளான
"செந்தமிழ் நாடெனும் போதினிலே", "பாருக்குள்ளே நல்ல நாடு", "பாரத தேசம்
என்று பெயர் சொல்லுவார்", போன்ற புகழார்ந்த கவிதைகளை, தான் "பாரதி"
இதழில் வெளியிட்டதையும் பெருமையாகக் கூறுவார் பரலியார்.

பிற்காலத்தில், நெல்லையப்பரைத் தன் குருவாக மதித்துப் பழகிய எதிரொலி
விசுவநாதன் என்ற இளைஞர் (அப்போது) நெல்லையப்பர் கூறிய பல செய்திகளை
"பாரதியின் தம்பி" என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல்
ஒன்றுதான் பரலி சு.நெல்லையப்பரின் பாரதி தொண்டையும், பாரதியார் பாடல்களை
முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்டதையும் தெளிவாகக் கூறுகிறது. அவர் அருமை
பெருமை தெரிந்த பலருள் இளைஞர் எதிரொலி விசுவநாதனும் ஒருவர்.

புதுவையிலிருந்து பாரதியார் அனுப்பும் பாடல்களை நூல் வடிவில் அச்சிட எந்த
அச்சகமும் அந்தக் காலத்தில் துணியவில்லை. ஆங்கில அரசாங்க அடக்கு முறைக்கு
அஞ்சினர். "இந்தியா" என்ற அச்சுக் கூடத்தின் உரிமையாளர் சீனுவாச
அய்யங்கார் அச்சிட்டுக் கொடுக்க முன்வந்த செய்தியை நெல்லையப்பர் கூறி,
"இங்கே அருகிலுள்ள அரண்மனைக்காரன் தெருவில்தான் அந்த அச்சுக்கூடம்
இருந்தது" என்றும் தெரிவித்தார்.

1917ஆம் ஆண்டில், பாரதியின் "கண்ணன் பாட்டு"

பரலியார் எழுதிய முகவுரையுடன் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன.

திரு.வி.க, வ.வே.சு. ஐயர் இவர்களுக்குப் பிறகு 1919இல் நெல்லையப்பர்,
"தேசபக்தன்" இதழில் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றினார். அந்தக்
குறுகிய காலத்தில் கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.

எந்தப் பத்திரிகையில் பணியாற்றச் சென்றாலும் பாரதியார் பாடல்களை
வெளியிடவும் அச்சிடவும் மறுப்பதில்லை நெல்லையப்பர். 1919இல் தேசபக்தன்
பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்றார். தேசபக்தன் மூலமாக பாரதியார்
பாடல்களை அச்சிட்டு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அதனால், தமிழ்
நாடெங்கும் பாரதியார் பாடல்கள் பரவின. தமிழர்களிடையே தேசிய உணர்வு
மீண்டும் பொங்கலாயிற்று.

பரலி சு.நெல்லையப்பர், தன் குருநாதரைப் போலவே வளமாக வாழ்க்கையை நடத்தவில்லை.

தூத்துக்குடியிலும், புதுவையிலும், சென்னையிலுமாக பாரதியார் பணி,
பத்திரிகைப் பணி, பாரதியார் நூல்களை வெளியிடும் பணி என்றே தன் முழு
உழைப்பையும் இரவு பகல் பாராமல் நல்கியதால், திருமண நினைவே வராமல்,
பிரம்பசாரியாகவே காலத்தைக் கழித்தார்.

இறுதி நாள்களில் பொது வாழ்க்கையில் பின்னடையவில்லை. பாரதியார் சங்கம்,
சைதாப்பேட்டை பாரதி கலைக்கழகம், தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் என்று தம்மை
ஈடுபடுத்திக்கொண்டு அவர்களிடையே பேசுவதும், இளைஞர்களை
உற்சாகப்படுத்துவமாக சுறுசுறுப்பாக இருந்தார்.

காந்தி மகானிடமும் மிகுந்த பக்தி கொண்ட நெல்லையப்பர், 1941இல் தனிநபர்
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். 1908லும் ஒருமுறை சிறை
சென்றிருக்கிறார். பலாத்காரக் கொள்கையில் இளவயதில் ஈடுபாடு கொண்ட
பரலியாரை அகிம்சாவாதியாக மாற்றியவர் பாரதியே!

பாரதியின் உயர் நண்பர்கள் என்ற பட்டியலில் - கம்பருக்குச் சடையப்ப வள்ளல்
போல முதலில் இடம் பெறும் சிறந்த பத்திரிகையாளரான பரலி சு.நெல்லையப்பர்,
1991ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். மகாகவியின்
பெயருள்ள வரை பரலி சு.நெல்லையப்பர் பெயரும் நிலைத்து நிற்கும்.

கலைமாமணி விக்கிரமன்

நன்றி:- தினமணி


Bharathiar's Daughter Smt Sagunthala Narrates an incident--See below:

ஒரு தீபாவளியன்று நடந்த சம்பவம் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது."

"முதல் நாள், ஜவுளிக்கடை சொந்தக்காரரான நண்பர் ஒருவர், வழக்கம் போல, என் தந்தைக்கு வேஷ்டிகள், எனக்குப் பாவாடை சட்டை, என் தாயாருக்குப் புடவை இவற்றை இனாமாக அனுப்பி வைத்தார். அன்பிற் சிறந்த சீடர் பலர், எனக்குத் தேவைக்கு மிஞ்சியே பட்டாஸ், மத்தாப்பு, வாண வகைகளும் மற்றும் பூ, வெற்றிலை, பழங்கள் யாவும் கொணர்ந்து தந்தார்கள். தீபாவளியன்று இரவு, நாங்கள் குதூகலமாக விளையாடிவிட்டுத் தூங்கிப் போய்விட்டோம்."

"என் தந்தை மட்டும் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். கவிதை எழுத யோசிப்பதானால் அவர் அங்குமிங்கும் உலாவுவார். பிறகு எழுதத் தொடங்கினால், கை சளைக்காமல் எழுதிக் குவிப்பார். எனவே, அவர் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதிலிருந்தே அவர் எதையோ நினைத்துக் கவலைப்படுகிறார் என்று அறியலாம். நடுநிசி. இரண்டு நண்பர்கள் வந்து கதவைத் தட்டினார்களா. என் தந்தை தாமே போய்க் கதவைத் திறந்தார். வந்தவர்களில் ஒருவர் ஓரணாவும் இரண்டணாவுமாக மாற்றிப் பணச்சுருள்களை என் தந்தையின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தார். அவர் வியப்புடன், "நான் பணம் வேண்டுமென்று யாரிடமும் சொல்லவில்லையே! நீங்கள் எவ்வண்ணம் என் உள்ளக் கருத்தை உணர்ந்து சில்லறை மாற்றிக் கொணர்ந்தீர்கள்? என்று கேட்டாராம். வந்தவர்கள் பணக்காரர்கள் அல்ல, சாதாரணக் குடும்பத்தில் பிறந்து துணி நெய்யும் தொழிலாளிகள். அந்த அன்பர்களில் ஒருவர் பின்வருமாறு பதிலளித்தாராம்."

"சுவாமி! நாங்கள் யாவரும் சாப்பிட்டுப் படுத்து நித்திரை போய்விட்டோம். என் கனவில், மாதா பராசக்தி காளிதேவி தோன்றி, அடே, உத்தராவதி! எழுந்திரு. என் பக்தன் பாரதி நாளைக் காலையில் தன்னைக் காணவரும் ஏவலர், தொழிலாளிகள், நண்பர்களுக்குப் பரிசளிக்கக் கையிலே காசில்லாமல் நொந்து மனம் வருந்துகின்றான். உடனே உன் கையிலுள்ள பணத்தைச் சில்லறையாக மாற்றி எடுத்துக் கொண்டு போய்க் கொடு என்று சொன்னாள். நான் உடனே எழுந்து, என் கையிலிருந்த ரூபாய் பத்துக்கும், காசுக்கடை செட்டியாரை எழுப்பி, சில்லரை மாற்றிக்கொண்டு, தனியே வரப் பயமாக இருந்ததால், என் சிநேகிதனையும் உடனழைத்துக் கொண்டு வந்தேன் என்றார்."

"தமக்குத் தேவையான துணி முதலியன இருந்தும், மறுநாள் காலையில் தம்மைக் காணவரும் வேலையாள்கள், ஏழைகள், முதலானவர்களுக்குக் கொடுக்க ஓர் பைசாக்கூட இல்லாததை நினைத்து, எங்கு யாரிடம் போய்க் கடன் வாங்கி வருவது என்று என் தந்தை வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாராம். பராசக்தியருளால் அந்தத் தீபாவளி மனக் கவலையின்றிக் கொண்டாடப்பட்டது."

Courtesy: Bharathi Ilakkiya Payilagam

When this Song was composed??
"ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா"

"ஒரு நாள் காலை பாரதி வெள்ளாளர் வீதியிலிருந்த கிருஷ்ணசாமிப் பிள்ளை வீட்டில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது மாடியின் தளத்தில் அவரது பெண் குழந்தை தடதடவென்று ஓடியது. இந்த சத்தம் கேட்டதும் கிருஷ்ணசாமி பிள்ளை சிறிது அதிர்ச்சியடைந்து, 'ஓடாதே பாப்பா, விழுந்திடுவே' என்று குரல் கொடுத்தார். 'காக்கா ஆப்பத்தைப் பிடுங்குது' என்றது குழந்தை. உடனே பாரதி, "ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, எத்தித் திருடும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா" என்று சொல்லிவிட்டு பிறகு அந்தக் கவிதையை எழுதி முடித்தாராம்."

Courtesy: Bharathi Ilakkiya Payilagam

No comments: